செய்திகள் :

உபி: 15 வயதில் திருமணம்; 22 வயதில் 5 குழந்தைகள்: ஆண் குழந்தைக்காக 6-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்

post image

வட மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால் தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஆந்திரா அரசு அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 22 வயதேயான ஒரு பெண்ணிற்கு 5 குழந்தைகள் இருப்பதை கேட்டு டாக்டர் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள பாரவுட் என்ற மாவட்டத்தில் இருக்கும் பாக்பட் என்ற இடத்தில் இருக்கும் ஸ்பாண்டன் மருத்துவமனைக்கு 22 வயது கர்ப்பிணி ஒருவர் தன்னுடைய கணவருடன் பரிசோதனைக்காக வந்தார்.

அவரை டாக்டர் பிரக்யா சோதனை செய்தார். அத்தம்பதியிடம் டாக்டர் பேசியபோது அப்பெண்ணிற்கு 22 வயதாகிறது என்றும், ஏற்கெனவே 5 குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். வயிற்றில் இருப்பது ஆறாவது குழந்தை என்று தெரிவித்தனர். ஐந்து பேரில் 4 பேர் பெண் குழந்தைகள் என்றும், ஓர் ஆண் குழந்தை என்றும் தெரிவித்தனர்.

டாக்டர் அப்பெண்ணிடம் பேசியபோது, ``எனக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறக்கிறது. ஓர் ஆண் குழந்தை மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கு மேலும் ஓர் ஆண் குழந்தை தேவை" என்று தெரிவித்தார். அருகில் நின்ற அப்பெண்ணின் கணவர், ``குடும்பத்தைக் காப்பாற்றவும், சந்ததியை எடுத்துச் செல்லவும் ஓர் ஆண் குழந்தை போதாது" என்று தெரிவித்தார்.

இவ்வளவு இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து டாக்டர், தம்பதியினரை எச்சரித்தார். டாக்டரின் கூற்றுப்படி, அந்தப் பெண் ஏற்கெனவே மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் உடல் வலி இருப்பதாகத் தெரிவித்து இருந்தார் - பொதுவாக உடல் சோர்வு, ரத்த சோகை மற்றும் நெருங்கிய இடைவெளி கர்ப்பத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புடைய அறிகுறிகள் அப்பெண்ணிடம் காணப்பட்டது. ``தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக்கொள்வதால் உங்கள் உயிரைப் பணயம் வைக்கிறீர்கள்" என்று டாக்டர் அப்பெண்ணை எச்சரித்தார். முந்தைய பிரசவத்தில் இருந்து முழுமையாக மீள்வதற்குள் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பது தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்றும் அப்பெண்ணிடம் டாக்டர் எச்சரித்தார்.

இந்த செய்தி சமூக ஊடகத்தில் வெளியானவுடன் உடனே வைரலானது. பல பயனர்கள் பெண்ணின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர். மேலும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க பெண்கள் மீது செலுத்தப்படும் சமூக நெருக்கடியை விமர்சித்தனர். பல பயனர்கள் கருத்தடை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, ஆரம்பகால திருமணம், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு இல்லாதது போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினர்.

குழந்தை பிறப்பில் உ.பி இரண்டாவது இடம்

இந்திய அளவில் குழந்தைகள் பிறப்பதில் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் பீகாரும், மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசமும் இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியான 2024 இன் மாதிரி பதிவு அமைப்பு (SRS) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR), அல்லது ஒரு பெண்ணின் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை, 2.1 இல் இருந்து 1.9 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2.9 சதவீதத்தில் இருந்து 2.2 சதவீதம் வரை இருக்கிறது. அதேசமயம் மிகவும் குறைவாக குழந்தை பிறக்கும் மாநிலத்தில் டெல்லி (1.2) முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் குழந்தைகள் குறைவு

கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. 0-14 வயதுடைய குழந்தைகள் மொத்த மக்கள் தொகையில் பீகாரில் 31.5 சதவீதம் இருக்கிறது. ஆனால் அது தமிழ்நாட்டில் வெறும் 18 சதவீதம்தான் இருக்கிறது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க