செய்திகள் :

உலகுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சற்றே தயக்கத்துடன் தொடங்கிய இத்தொழில்நுட்பம் இன்று உலகிற்கு முன்மாதிரியாக விளங்குவது வரலாறே.

ஒவ்வொரு முறையும் வங்கியை நாடாமல் வேண்டிய நபருக்கு எந்நேரமும் உடனடியாக பணம் அனுப்ப முடியும் என்ற தொழில்நுட்பமே ’Unified Payments Interface’ - யுபிஐ (UPI) .

பசுமை புரட்சிக்கு பிறகு அனைத்து மக்களையும் சென்றடைந்த புரட்சி இந்த டிஜிட்டல் நிதிசேவை புரட்சியாகும்.  இது இந்தியாவில் மூலை முடுக்குகளிலெல்லாம் 24 மணி நேரமும் நிகழ்நேர பணபரிமாற்றத்தை சாத்தியமாக்கியுள்ளது.

இந்தியாவில் போன் பே, கூகுள் பே, பேடிஎம், பாரத் பே ஆகியவை பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் செயலிகள்.

மாதம் சராசரியாக 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சில்லறை மற்றும் மொத்தம் பரிவர்த்தனைகள் UPI மூலம் நடைபெறுகின்றன. இதில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்தனை போன் பே செயலியிலும், சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அளவு பரிவர்ததனை கூகுள் பே செயலியிலும் நடந்துள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 64.5 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. மாதம் சராரியாக 2000 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. மேலும் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அன்று மட்டும் 70.7 கோடி பரிவர்த்தனைகள் நடந்தது மிகப்பெரிய சாதனையாகும்

நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI)

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தியாவில் இந்த UPI பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் நிறுவனமாகும். இது ஆர்.பி.ஐ மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.

உலகம் முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தைனைகளில் ஏறக்குறைய 50%-க்கும் மேல் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் நிதித்தொழில்நுட்பம் நமது எல்லைகளை கடந்து பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், மொரீசியஸ், பிரான்சு போன்ற நாடுகளிலும் உள்ளது. 

நம்மை போன்றே பெட்நவ் (FedNow), ஜெல்லி (Zelle) போன்றவை அமெரிக்காவிலும், அலி பே (Alipay), வி சாட் பே (WeChatPay), யூனியன் பே (Union Pay) போன்றவை சீனாவிலும் பயன்பாட்டில் உள்ளது.

எளிமையான பண பரிவர்த்தனைகள் ஒருபுறமிருக்க மறுபுறம் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. செல்போன் எண்களின் மூலம் பண பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் சைபர் குற்றவாளிகளின் கைகளில் தனிமனித தகவல்கள் சிக்கும் அபாயமும் உள்ளது.

நிதிசார் கல்வியறிவு வளர்ந்து கடைகோடிகளில் உள்ளவர்களும் இந்த UPI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது உலகினுக்கு இந்தியா கற்றுக்கொடுத்த தொழில்நுட்பக் கொடை…

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜியத்தில்?|InDepth

அனில் அம்பானிசில ஆண்டுகளாக அதிகம் கேட்கப்படாத... உச்சரிக்கப்படாத பெயர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியுள்ளது.பாகப்பிரிவினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் ஆணிவேரான திருபாய் அம்பானிய... மேலும் பார்க்க

தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறுவது என்ன?

சமீபத்தில் ஜி20 அமைப்பு உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் இதோ... > 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து புத... மேலும் பார்க்க

Commodity Trading-ல் லாபம் பார்ப்பது எப்படி | MCX Future-ல வெள்ளியை வித்துட்டும் வாங்கலாமா - Part 2

இந்த வீடியோவில் எப்படி கமாடிட்டியில் வர்த்தகம் செய்வது, வெள்ளியில் future contract-எப்படி எடுப்பது, margin money எவ்வளவு தேவை, Silver ETF-ல் முதலீடு செய்யலாமா என்பதையெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்... மேலும் பார்க்க

55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள்! - இந்தியாவின் நிலை என்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

StartUp சாகசம் 45: `காற்றுமாசை குறைக்க உதவும் `AERSAFE’ தொழில்நுட்பம்’ - இது KARDLE Industries கதை

KARDLE IndustriesStartUp சாகசம் 45காற்று மாசுபாடு என்பது மனிதர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு உலகளாவிய நெருக்கடியாகும். காற்றில் PM2.5 மற்றும் PM10 போன்ற... மேலும் பார்க்க