இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்
ஊரக வளா்ச்சித் துறையில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலா்களுக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளா்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகள் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில், 121 ஊராட்சிகளைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் 83 போ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.