செய்திகள் :

"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

post image

சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'டபுள் ஆக்குபன்சி'.

இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.

சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார்.

'டபுள் ஆக்குபன்சி'
'டபுள் ஆக்குபன்சி'

சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அனந்திதா சுந்தர், “நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம்.

ஏ.சி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம்.

இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அப்பாவின் அனுபவம், வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.

படக்குழு
படக்குழு

மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குநர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள்.

அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது.

இந்த படம் அனைவரின் கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க