செய்திகள் :

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திடீரென தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ``தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி, அவரின் மகன் நித்தின்குமார், மகள் இலக்கியா, கணவன் செங்குட்டுவன் ஆகியோர் தான் காரணம்’’ என தர்ஷினியின் தந்தை ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அந்த புகாரில், ``ரேவதியும் அவரின் மகள், மகனும் என்னுடைய வீடு புகுந்து என் மகள் தர்ஷினியை அடித்து உதைத்ததோடு, ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மனமுடைந்து என் மகள் தர்ஷினி தற்கொலை செய்துகொண்டார்’’ எனக் கூறியிருந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் ரஜினி

போலீஸாரும் விசாரணை நடத்தி, செங்குட்டுவனை தவிர்த்து ரேவதி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில், வெளியே சுற்றித்திரிந்த செங்குட்டுவன் அவ்வப்போது ரஜினி குடும்பத்தினரிடம் `உங்களையும் கொல்வோம்’ என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார், ஆட்டோ ஓட்டுநர் ரஜினி. இந்த புகாரின்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட ரேவதி உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றனர். இவர்களும் ரஜினி குடும்பத்துக்கு மேலும் அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ ஓட்டுநர் ரஜினி, நேற்றைய தினம் தூக்குப்போட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். முன்னதாக, வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசும் ரஜினி, ``என் மகளைக் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ரேவதி குடும்பத்தினர் தாக்கினார்கள். என் மகள் இல்லாத இந்த உலகில், என்னால் நிலையாக வாழ முடியவில்லை. இப்போது எந்த நேரமாக இருந்தாலும், என் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்டேன்.

ஆட்டோ ஓட்டுநர் மகள் தர்ஷினி

என்னையும் தற்கொலை மனநிலைக்கு ஆளாக்கியது செங்குட்டுவன், ரேவதி, இலக்கியா, நித்தின்குமார் ஆகியோர் தான். என் வாகனத்தையும் உடைத்து என்னையும் தாக்கிவிட்டார்கள். முதலமைச்சர் விஜய் அய்யா, இது என்னுடைய வாக்குமூலம். இப்போது, என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன். இதற்காக அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்கிறார், விரக்தியான மனநிலையோடு. இதையடுத்து, ரஜினியின் உடலை மீட்ட போலீஸார், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள... மேலும் பார்க்க

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநா... மேலும் பார்க்க

சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியை... மேலும் பார்க்க

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமி... மேலும் பார்க்க

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம்,... மேலும் பார்க்க