ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.
இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்றிருந்த மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியது. முதல் பாதியின் 29-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் மெஹ்தாப் சிங் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.