செய்திகள் :

``ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டவில்லை" - ரன்வீர் சிங் படத்தை பாராட்டி விராட் கோலி

post image

துரந்தர் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த மாதம் அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' படத்தை விராட் கோலி பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 'துரந்தர் - தி ரிவெஞ்ச்'
'துரந்தர் - தி ரிவெஞ்ச்'

" 'துரந்தர்' படத்தைப் பார்த்தேன். இந்தியாவில் எடுக்கபட்ட படங்களில் இதுபோன்ற ஒரு சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை. கிட்டதட்ட 4 மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட கண் சிமிட்டாமல் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆதித்ய தர்... உங்களின் திறமையும், உறுதியும் இந்தப் படத்தில் பிரதிபலிக்கின்றன. நீங்கள் ஒரு மேதை! உங்களுக்கு எனது பாராட்டுகள்.

படத்தில் நடித்த அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடித்திருந்தாலும் ரன்வீர் சிங் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் ஒரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். உங்கள் நடிப்பு அற்புதமாக இருந்தது" என்று பாராட்டியிருக்கிறார்.

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க