செய்திகள் :

`ஒலிம்பிக்ஸ், மணிப்பூர் பெண்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்களா பெண்களின் ரட்சகர்கள்?' பிரியங்கா காட்டம்

post image

கடந்த 16-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நேற்று வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது.

இதையொட்டி, இன்று டெல்லியில் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"நேற்று நடந்த தொகுதி மறுவரையறை தோல்வி என்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய வெற்றி. நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றவும், நமது ஜனநாயக அடித்தளத்தைப் பலவீனப்படுத்தவும் அரசாங்கம் தீட்டிய சதி முறியடிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கும், நாட்டிற்கும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி - இது ஆளும் கட்சித் தலைவர்களின் முகங்களிலேயே தெளிவாகத் தெரிந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சதி திட்டம்

இந்த கூட்டத்தொடர் திடீரென அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்பு வரை வரைவு விவரங்கள் யாருக்கும் தெரியாது.

தாங்கள் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீட்டை இணைப்பதன் மூலம், சாதி வாரியான கணக்கெடுப்பைத் தவிர்க்கவும், 2029-ம் ஆண்டு வரையில் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கவும் அவர்கள் முயன்றனர்.

ஒலிம்பிக்ஸ்... மணிப்பூர்

பெண்களின் ரட்சகராக இருப்பதைச் செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். உன்னாவ், ஹத்ராஸ் சம்பவங்களின் போதும், டெல்லி வீதிகளில் நமது ஒலிம்பிக் வீராங்கனைகள் போராடியபோதும் என்ன நடந்தது என்பதைப் பெண்கள் பார்த்திருக்கிறார்கள்.

மணிப்பூர் பெண்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் பார்த்திருக்கிறார்கள். திடீரென்று நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு தாங்கள்தான் 'பெண்களின் மீட்பர்' என்று உரிமை கொண்டாடுவது அப்பட்டமான நாடகம்.

இது இடஒதுக்கீடு பற்றியது அல்ல... இது தொகுதி மறுவரையறை பற்றியதும், சாதி ரீதியான தரவுகளைத் தவிர்ப்பது பற்றியதுமாகும்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

கருப்பு நாள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தோல்வியைத் தழுவிய அதிர்ச்சியில் அரசாங்கம் இதை ஒரு 'கருப்பு நாள்' என்று அழைக்கிறது.

அவர்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், ஒருமித்த கருத்து நிலவிய 2023-ம் ஆண்டு சட்டத்தைக் கொண்டு வந்து, சிறிய திருத்தங்களைச் செய்து, உடனடியாகச் செயல்படுத்தியிருப்பார்கள்.

தொகுதி மறுவரையறை போன்ற சிக்கலான நடைமுறைகளுடன் இதை இணைப்பதன் மூலம் பெண்களைத் திசைதிருப்பக் கூடாது. அவர்களின் உரிமைகளை இப்போதே வழங்குங்கள்".

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' - குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்க... மேலும் பார்க்க

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க