செய்திகள் :

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

post image

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது.

இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு.

அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் விஷ்ணுவின் புகார் குறித்து கஞ்சா விற்கும் கும்பலுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தக் கும்பல் விஷ்ணுவிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போலப் பேசி வரவழைத்துள்ளனர்.

விஷ்ணு வந்தவுடன், ஏற்கெனவே கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பல், அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் விஷ்ணுவைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல்
தாக்குதல்

இதில் படுகாயமடைந்த விஷ்ணு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாள்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு, நேற்று உயரிழந்திருக்கிறார்.

'காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் விஷ்ணுவின் உயிர் போயிருக்கிறது' என்று விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பின்னர், 'சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம்' என்கிற காவல்துறை ஆணையர் உறுதிக்குப் பின், விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டிருக்கின்றனர்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க