செய்திகள் :

நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

post image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா.

திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். நாளடைவில் அவருக்கும் அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மூலைக்கரைப்பட்டி
மூலைக்கரைப்பட்டி

அந்த உறவினருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் அமுதாவின் பெற்றோருக்குத் தெரிய வர தகாத உறவைக் கைவிடும்படி அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அமுதா அவருடனான பழக்கத்தைக் கைவிட மறுத்துள்ளாராம்.

இதுதொடர்பாக அமுதாவிற்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அமுதா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அவர் தற்கொலைசெய்து கொண்டதாக பெற்றோர்கள் உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

மூலைக்கரைப்பட்டி
மூலைக்கரைப்பட்டி

அமுதாவின் தாய், தந்தையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பலமுறை கூறியும், அமுதா தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அமுதாவின் கழுத்தை நெரித்தோம். சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்ந்தார்.

பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டோம் எனக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அமுதாவின் தாய், தந்தை இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.   

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுர... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது. இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு. அந்தக் காவல் நிலையத்தில் உ... மேலும் பார்க்க

கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம். அகிலா மூன்று மாதக்... மேலும் பார்க்க

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கி... மேலும் பார்க்க

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்ற... மேலும் பார்க்க