செய்திகள் :

கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - சென்னை தண்டையார்பேட்டை சம்பவத்தில் என்ன நடந்தது?

post image

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று கஞ்சா விற்று வந்திருக்கிறது.

இதை எதிர்த்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் விஷ்ணு.

அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவலர் ஒருவர் விஷ்ணுவின் புகார் குறித்து கஞ்சா விற்கும் கும்பலுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தக் கும்பல் விஷ்ணுவிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போலப் பேசி வரவழைத்துள்ளனர்.

விஷ்ணு வந்தவுடன், ஏற்கெனவே கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பல், அம்மிக்கல், பீர் பாட்டில் போன்றவற்றால் விஷ்ணுவைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதல்
தாக்குதல்

இதில் படுகாயமடைந்த விஷ்ணு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூன்று நாள்களாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு, நேற்று உயரிழந்திருக்கிறார்.

'காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் விஷ்ணுவின் உயிர் போயிருக்கிறது' என்று விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

பின்னர், 'சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்கிறோம்' என்கிற காவல்துறை ஆணையர் உறுதிக்குப் பின், விஷ்ணுவின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி: வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; தவெக நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுர... மேலும் பார்க்க

கேரளம்: திருமணம் மீறிய உறவால் குழந்தை கொலை; நடனப் பெண், டிரைவர் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்

கேரள மாநிலம் நெடுமங்காடு பனவூரில் வாடகை வீட்டில் வசித்துவந்தார் அகிலா. நடன மங்கையான அகிலா நடனக்குழுவுடன் கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதற்குச் செல்வது வழக்கம். அகிலா மூன்று மாதக்... மேலும் பார்க்க

"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பிரபலம் தற்கொலை?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த த்விஷா சர்மா என்ற எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் சமீபத்தில் போபாலில் உள்ள தனது கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரைக் கொலை செய்து தூக்கி... மேலும் பார்க்க

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்ற... மேலும் பார்க்க

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வ... மேலும் பார்க்க

மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்... மேலும் பார்க்க