தொடரும் விலகல், தத்தளிக்கும் நிர்வாகிகள் : மம்தாவின் கைகளை விட்டு நழுவுகிறதா திர...
"திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, முதல்வர் பொறுப்புடன் செயல்படுவது எப்போது?" - கனிமொழி கேள்வி
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர் தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி ஜெயபால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி தவெக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள்தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

















