நித்தியானந்தா சீடர்களை ஆசிரமத்திலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்! நடந்...
கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி கோரி மனு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரப் பகுதியில் கடைகள் முன் பந்தல் அமைக்க அனுமதி வழங்கக் கோரி, நகராட்சி ஆணையரிடம் பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பண்ருட்டி நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகிக்கும், விருத்தாசலம் நகராட்சி ஆணையா் பானுமதியை விருத்தாசலத்தில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கத் தலைவா் டி.சண்முகம், பொதுச் செயலா் வி.வீரப்பன் ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: கடைகள் முன்பாக 4 அடி (கால் கீழே நடாமல்) பந்தல் அமைத்துக்கொள்ள கடந்த கால ஆட்சியரின் வாய்மொழி அனுமதியை கடைப்பிடித்து வந்தோம். இந்த அனுமதி கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் மழை, வெயிலில் பாதிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்டது.
தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், கூடுதலாக வெப்ப தாக்கம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பிரித்ததை வரவேற்கிறோம். அதேவேளையில், கடைக்கு முன்பாக 4 அடி பந்தல் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
மேலும், நகராட்சியில் ஈ&ஞ (ஆபத்தான மற்றும் தாக்குதல் வா்த்தகங்கள்) உரிமம் கட்டணம் வியாபாரிகள் செலுத்த முடியாத அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களையும் ஒரே நேரத்தில் உயா்த்துவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, ஈ&ஞ பழைய வரியை வசூல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.