செய்திகள் :

'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?

post image

சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர்.

சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தமாக கொடுத்திருக்கிறது மாநகராட்சி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மண்டலங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னைக்குள் 150 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு திரும்பக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர்.

இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு கொண்டிருந்தனர். 'நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பதினைஞ்சு இருபது வருசமா இந்த ஊருக்காக வேலை பார்த்த எங்களை குப்பை மாதிரி தனியார்க்கிட்ட தூக்கி போடுறீங்களே இது நியாயமா? நாங்க எங்க வேலையைத்தானே கேட்குறோம். யாருக்கும் தொந்தரவா செய்யுறோம்? அப்புறம் ஏன் எங்களை திருடனை பிடிக்கிற மாதிரி பிடிக்கிறீங்க? அஞ்சு மாசமா வேலை இல்லாம இருக்குறோம்.

இங்க இருக்க நிறைய பொம்பளைங்களுக்கு புருஷன் கிடையாது. நாங்க வேலைக்கு போனாதான் சோறு. எங்க புள்ளைங்க எல்லாம் பட்டினியா கெடக்கு. நாங்க எதுவும் தப்பா பேசியிருந்தா கூட மன்னிச்சிடுங்க. முதல்வர் அய்யா எங்களுக்கு நல்லது பண்ணுங்க. எங்க வேலையை கொடுங்க. இல்ல எங்கள ஜெயில்ல போடுங்க. இல்ல போராட விடுங்க. இந்த ரிப்பன் பில்டிங் முன்னாடியே எங்க உசுரு போகட்டும்..' என பெண் தூய்மைப் பணியாளர்கள் கதறினர்.

இரவு 11:15 மணிக்கு மேல் கூடியிருந்த 1000 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். கோரிக்கை நிறைவேறாமல் நகரமாட்டோம் என உறுதியாக நின்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களை வெவ்வேறு இடங்களில் மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

ரிப்பன் பில்டிங்
ரிப்பன் பில்டிங்

போராடிய தூய்மைப் பணியாளர்களை கைது செய்த பின் முன்னெச்சரிக்கையாக ரிப்பன் பில்டிங்கின் கேட்டுகளை மூடி பூட்டு போட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்புக்கு காவலர்களையும் நிறுத்தியிருக்கின்றனர்.

JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை

"திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்" என்று தமிழ... மேலும் பார்க்க

வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் - காரைக்குடி தொகுதி யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள். தே... மேலும் பார்க்க

"என்னோடு நின்ற தம்பி இளமகிழன்" - உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?

"வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்" என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று ... மேலும் பார்க்க

"பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்" - எல்.முருகன்

"பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்..." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அஞ்சலி செலுத்தும் முருகன்திருப்பரங்குன்றத்தில் தீ... மேலும் பார்க்க