செய்திகள் :

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதல்; இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழப்பு - குளித்தலை சோகம்

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடியை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (48). இவர், கரூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரியில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த மேகநாதன்(37) என்பவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காங்கேயம் சென்றார்.

accident

அப்போது, சம்பவ இடத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு லாரி டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய இரண்டு டிரைவர்களின் உடல்களையும் கிரேன் உதவியுடன் மீட்டனர்.

மேலும், லாரிகளுக்கு பின்னால் வந்த 2 கார்களின் முன்பகுதி மட்டும் சேதம் ஏற்பட்டது. குளித்தலை போலீஸார் இரண்டு உடல்களையும் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உடல் கூராய்வுக்காக அனுமதித்தனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தினால் வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

accident

இந்நிலையில், குளித்தலை போலீஸார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருக... மேலும் பார்க்க

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க

"பார்க்கவே முடியாத கோரமான காட்சி" - திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ ... மேலும் பார்க்க

நேபாளம்: சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு - நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க

Nepal: ஒரே கட்டடத்துக்குள் 24 சடலங்கள்; சேற்றுக்குள் உறைந்த உடல்கள் - போராடி மீட்ட மீட்புக்குழு

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில... மேலும் பார்க்க