செய்திகள் :

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கதில் அறிவிப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், ``தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அத... மேலும் பார்க்க

TNPSC: நிரப்பப்படாத பதவிகள், ஆளுநர்; அரசு மோதல் - சரி செய்யப்பட வேண்டியது தேர்வாணையம்தான்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 தேர்வு ரத்தானது அல்லவா? தேர்வாணைய வரலாற்றிலேயே தேர்வு நாள் அன்று காலையில் தேர்வு ரத்தாவது இதுதான் முதல் முறை. 'தொழில்நுட்பக் கோளாறு, தவறுக்கு வருந... மேலும் பார்க்க

TNPSC: `தேர்வு ரத்து பெரும் வலி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு அது ரொம்பவே புரியும், ஏன்னா?'

தமிழ்நாட்டில் நேற்று டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட, 'தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நிகழ்ந்து விட்டது, வருந்துகிறோம்' என ஒற்றை வார்த்தையில் அறிவித்து விட்டது ... மேலும் பார்க்க

கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! - விடிவு எப்போது?

`இந்தியா ஒரு சுதந்தி நாடு'... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்வி... மேலும் பார்க்க