செய்திகள் :

'கல்வி மட்டும் இருந்தால் போதும்' - 3 அடி உயரம் கொண்ட 'வைரல்' டாக்டர் கணேஷின் வைராக்கிய கதை!

post image

கல்வி மட்டும் இருந்தால் போதும். மருத்துவர் ஆக, 'உயரம் ஒரு தடை இல்லை' என்று வைராக்கிய சாதனை புரிந்துள்ளார் 3 அடி உயரம் கொண்ட கணேஷ் பரையா.

தொடர்ந்து தடைகள்

குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தை சேர்ந்த கோர்க்கி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கணேஷ் பரையா. சிறுவயதிலிருந்தே தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்பதே இவரது கனவு.

அந்தக் கனவை அடைய இவருக்கு சமூகம், உயரம் என அடுத்தடுத்து தடைகள். இவை அனைத்துமே இவருக்கு மருத்துவராக தகுதியே இல்லை என்பதை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தன.

ஆனால், இவற்றை துளிக்கூட சட்டை செய்யாமல், மன உறுதியுடன் முயற்சித்து வந்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

மூன்று அடி இருக்கும் இவருக்கு, 72% இயக்கம் சார்ந்த குறைபாடும் இருக்கிறது.

2018-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவருக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் இவருடைய உயரம் மற்றும் 72% இயக்கம் சார்ந்த குறைபாடு காரணம் காட்டி எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு சீட் தர மறுத்துள்ளது.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கணேஷ். ஆனால், அங்கே அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

அடுத்து உச்ச நீதிமன்றத்தின் படிகளை ஏறியுள்ளார் கணேஷ்.

உச்ச நீதிமன்றம், 'உயரத்தை வைத்து இவருக்கு சேர்க்கை மறுக்கப்பட்டு இருக்கக்கூடாது' என்று கூறி, இவருக்கு 2019-ம் ஆண்டு பாவ்நகர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கையும் கொடுக்கும்படி உத்தரவிட்டது.

'என்னைத் தூக்கி வைத்திருப்பார்கள்..'

பல தடைகளைத் தாண்டி மருத்துவர் ஆகியிருக்கும் இவருக்கு தன் வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றாகவே உதவி இருக்கிறார்கள். 'உடற்கூறியல் (anatomy) வகுப்புகளில் எனக்கு முதல் இருக்கையில் இடம் கொடுப்பார்கள். சிகிச்சை நடக்கும் போது சிகிச்சை மேஜைகளை நான் பார்க்க வேண்டும் என்பதற்காக என் நண்பர்கள் என்னை தூக்கி வைத்திருப்பார்கள்' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கணேஷ்.

மருத்துவர்
மருத்துவர்

மக்கள் புரிதலோடு அணுகுகிறார்கள்...

கணேஷ் மருத்துவராக பணிபுரியும் வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல்.

அது குறித்து இவர் கூறும்போது, 'என்னைப் பார்த்ததும் மக்கள் கொஞ்சம் தயங்குகிறார்கள். ஆனால் என்னைப் பற்றி தெரிந்ததும் என்னை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் என்னை புரிதலோடு அணுகுகிறார்கள். கிராமப்புற மக்களுக்கு மருத்துவ உதவி அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்காகவே நான் சேவை செய்ய விரும்புகிறேன்' என்று தனது கனவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

``அம்மாவும் ஓவியமும் இருக்க எனக்கென்ன குறைச்சல்'' - அரியலூர் மாணவரின் தன்னம்பிக்கை கதை!

உடல் உறுப்புகள் எல்லாம் இயல்பாக இருந்தும், 'என் கிட்ட என்ன இருக்கு ஜெயிக்க' என்று தன்னம்பிக்கை இல்லாமல் பலபேர் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், வாய் மற்றும் செவி சவால் கொண்ட பாலமுருகனின் கதை அத... மேலும் பார்க்க

’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சில தினங்களுக்கு முன்னால் தன்னுடைய மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார். மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்லாசிரியர்நம் ந... மேலும் பார்க்க

Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா (114), சில காலமாக உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். யார்... மேலும் பார்க்க