செய்திகள் :

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். அவர் ஓட்டிச்சென்ற ஆட்டோ ரோட்டோரம் கிடந்தது. அவர் சாலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அனிதாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சிவம் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே அவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதில் முக்கிய குற்றவாளி முகேஷ் என்று தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் போலீஸார் முகேஷை தேடி வந்தனர். முகேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது கார் அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு தேடிப்பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியதை தொடர்ந்து பகவான்புரா என்ற இடத்தில் முகேஷ் இருப்பது தெரிய வந்து அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

உடனே முகேஷ் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீஸாரும் திரும்ப சுட்டனர். இதில் முகேஷ் காலில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கைவிட்ட அனிதா

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரீத்தி சிங் கூறுகையில்,''முகேஷிடம் விசாரித்த போது அனிதாவும், முகேஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோயிலில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. இதையடுத்து அனிதா முகேஷை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அதோடு அனிதா வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டார். இதற்கு பழிவாங்கத்தான் முகேஷ் அனிதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் முகேஷும், அனிதாவும் திருமணம் செய்த நாளில் கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களின் துணையோடு சுட்டுக்கொலை செய்துள்ளார். அதுவும் அனிதா ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க