செய்திகள் :

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

post image

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், " காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ, இலக்கு வைத்தோ தாக்குதல் நடத்துவது போர்குற்றமாகும்.

குறிப்பாக புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் அருவருப்பானது. இது ஆழந்த கவலைக்குரியது. இது பிரிவினையையும், வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும்.

இந்த கொடூரமான செயலை ஐக்கிய நாடுகள் சபையும் பிற மனித உரிமை அமைப்புகளும் முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்

இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இந்த காயங்களிலிருந்து மீண்டு வருவோம்" என்று வேதனைத் தெரிவித்திருக்கிறார்.

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30... மேலும் பார்க்க

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற... மேலும் பார்க்க

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' - TTR கேட்ட கேள்வி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள... மேலும் பார்க்க

Gambhir: "வீரர்களைக் கையாண்ட விதத்தில் கம்பீர் தவறு செய்திருக்கிறார்" - சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட வித... மேலும் பார்க்க

T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், "இது தெரு ஒன்றி... மேலும் பார்க்க