செய்திகள் :

காலடியில் சமோசா; பயணிகளை அதிரவைத்த வியாபாரியின் வீடியோ - விளக்கமளித்த ரயில்வே!

post image

ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் அமர்ந்து, வேடிக்கை பார்த்தபடியே சுடச்சுட ஒரு கப் டீயும், சமோசாவும் சாப்பிடுவது எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனால், அடுத்த முறை நீங்கள் ரயிலில் சமோசா வாங்கும்போது இந்த வீடியோ உங்கள் நினைவுக்கு வந்து பயத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. நாம் அவ்வளவு ஆசையாக வாங்கிச் சாப்பிடும் சமோசாக்கள் எவ்வளவு அசுத்தமாக விற்கப்படுகின்றன என்பதைக் காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்தப் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருக்கும் வியாபாரி ஒருவர், மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அதிர்ச்சி என்னவென்றால், பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த சமோசா பெட்டியின் மீது, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தனது இரண்டு கால்களையும் நீட்டி, அதன் மீது மிதித்தபடி அமர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் இந்தச் செயல், ரயில் உணவுகளின் சுத்தம் மற்றும் மக்களின் உடல்நலம் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வீடியோ வைரலாகி மக்களின் கோபம் அதிகமானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணையில் இறங்கியது. வீடியோவில் இருக்கும் நபர் ரயில்வே ஊழியரோ அல்லது அனுமதி பெற்ற வியாபாரியோ கிடையாது என்றும், அவர் ரயிலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து தின்பண்டங்களை விற்ற வெளி ஆள் என்றும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

இனிவரும் காலங்களில் பயணிகளின் உடல்நலத்தோடு விளையாடும் இதுபோன்ற அசுத்தமான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, ரயிலில் உணவு விநியோகம் செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலுக்குள் முறையற்ற வெளி வியாபாரிகள் நுழைந்தால் உடனுக்குடன் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுகளின் தூய்மையைக் கண்காணிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

‘எனக்கு என்ன பிடிக்கும்னு யோசித்ததே இல்லை!’ - தாய்லாந்தில் தன்னைத் தேடிய இந்திய பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லி... மேலும் பார்க்க

கோர்ட்டில் விவாகரத்து ஆவணங்களைக் கிழித்துவிட்டு கட்டிப்பிடித்த தம்பதி; வைரல் படத்தின் பின்னணி என்ன?

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தனர். ஷிகா என்ற அப்பெண் செளரப் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களில் க... மேலும் பார்க்க

பீகார்: 17 வயது சிறுவனை திருமணம் செய்த 22 வயது பெண்; பஞ்சாயத்திற்கு வந்த விவகாரம்; என்ன நடந்தது?

பீகார் மாநிலம் மதுபுரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிப்பவர் பூஜாகுமாரி(22). இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பித்து குமார்(17) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டிற்க... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு மைய குளறுபடியால் மாறிய கரு? "பிறந்தது எங்கள் குழந்தைகள் அல்ல" - தம்பதி புகார்

டெல்லி அருகில் உள்ள குருகிராமைச் சேர்ந்த தம்பதியான ராகுல் மற்றும் மீனு தம்பதி செயற்கை முறையில் (Vitro Fertilisation) குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கைலாஷ் கருத்... மேலும் பார்க்க

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க