அதிமுக: ``எடப்பாடி அச்சப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள்!" - சொல்கிறார் சி.வி.சண்...
கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவின் தாய் சொல்வதென்ன?
நடிகை ஸ்ரீலீலா தற்போது, பாலிவுட்டில் அனுராக் பாசு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அதுபோல இங்கு கோலிவுட்டில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷை வைத்து இயக்கும் 'D55' படத்திலும் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார்.

கடந்த சில நாள்களாக ஸ்ரீலீலாவும், இந்தியக் கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.
தற்போது, ஸ்ரீலீலாவின் தாயார் அந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கமளித்திருக்கிறார்.
இது தொடர்பாகப் 'டெக்கான் குரோனிக்கல்' ஊடகத்திடம் பேசியிருக்கும் ஸ்ரீலீலாவின் தாயார் ஸ்வர்ணலதா, "இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இதில் சிறிதும் உண்மையில்லை.
இப்படியெல்லாம் எப்படிச் செய்திகள் உருவாகின்றன என்றே எங்களுக்குத் தெரியவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனையான செய்தி. ஸ்ரீலீலா, வருகிற ஜூன் மாதம் நடைபெறவுள்ள 'நீட்-பிஜி' மருத்துவ மேற்படிப்புத் தேர்விற்குத் தயாராகி வருகிறார். தற்போது அவருடைய கவனம் முழுவதும் படிப்பு மற்றும் திரைப்படங்களின் மீது மட்டும்தான் இருக்கிறது.
இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு இன்னும் ஐந்து, ஆறு ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறது. தற்போது அவர் படிப்பையும், சினிமா கமிட்மெண்ட்களையும் மிகச் சரியாக பேலன்ஸ் செய்து வருகிறார்.
தற்போது ஸ்ரீலீலா, பாலிவுட்டில் அனுராக் பாசு இயக்கும் படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் நடித்து வருகிறார். கார்த்திக் ஆர்யனின் தாயாரும் நானும் மகப்பேறு மருத்துவர்கள் என்பதால், மருத்துவத் துறை சார்ந்து நாங்கள் சந்திப்பதுண்டு.
அதனால், அப்போது மக்கள் ஸ்ரீலீலாவையும் கார்த்திக் ஆர்யனையும் இணைத்துப் பேசத் தொடங்கினார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.















