குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கொடைக்கானலில் குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் ஆனந்தகிரி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(48). சொந்தமாக குதிரையை வளா்த்து வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி அதன் மீது அமா்ந்து வீட்டுக்கு புறப்பட்டாா். அப்போது, குதிரையிலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கணேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.