புல்லட் பாபா: காவல் நிலையத்திலிருந்து மாயமாகும் புல்லட் - கோயில் கட்டி கும்பிடும...
BJP: வலுவான ஆர்.எஸ்.எஸ் பின்னணி டு பாஜகவின் தேசிய செயல் தலைவர் - யார் இந்த நிதின் நபின்?
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.
அவரது 3 ஆண்டு பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவரை நியமிக்க கட்சியில் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்றன.

இதுதொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பீகார் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த நிதின் நபின்?
பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பாஜகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.
தந்தை மறைவிற்கு பிறகு, நேரடி அரசியலில் நிதின் நபின் நுழைந்துள்ளார்.
பனிகாபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன் பிறகு 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க முகமாக இருந்து வரும் நிதின் நபின், கட்சியின் அமைப்பு பணிகள் மற்றும் தேர்தல் மேலாண்மையை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றியுள்ளார்.
வலுவான ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட நிதின் நபின், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் தேசிய பொதுசெயலாளர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தற்போது, பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.















