செய்திகள் :

குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

post image

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குமாரபாளையம் பகுதியில் மூன்று வயது பெண் குழந்தைக்கு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக உறவினர்கள் கண்ணீருடன் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்தக் கொடூரத்தை அறிந்த உள்ளுர் மக்கள், 59 வயதான அந்த நபரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். காவல்துறையினர் அவரை மீட்ட நிலையிலும், ஆத்திரம் தீராத மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, `அவனை எங்களிடம் ஒப்படையுங்கள்..' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் அந்த நபர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்து, தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டதால்... மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "3 வயது மற்றும் 12 வயது சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 59 வயது மற்றும் 62 வயதுடைய இரண்டு நபர்களைக் கைதுசெய்திருக்கிறோம். ஒருவரை சிறையில் அடைத்துள்ளோம்‌. மற்றொரு நபரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். இரண்டு சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடியதால் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் நிலைய கதவுகள் மூடப்பட்டன. கூடுதல் பாதுகாப்பு வழங்கி அந்த நபர்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றனர்.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க