செய்திகள் :

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் திருச்சி மாவட்டச் செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய 5 பேர் சென்றிருக்கின்றனர்.

அப்போது, குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் இருந்து ட்ரோன் மூலம் முழுவதுமாக எம்.எல்.ஏ-வின் கல்குவாரியை கவர் செய்து வீடியோ, போட்டோ எடுத்துள்ளனர்.

குளித்தலை காவல் நிலையம்

நெடுஞ்சாலைக்கும், குவாரிக்கும் இடையே 8 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. அப்போது, அந்த ட்ரோன் பறந்து கொண்டு வருவதைப் பார்த்த ஒருவர் மூலமாக, குவாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்து கிளம்பி வந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள், அவர்களை கடுமையாகத் தாக்கி அவர்கள் கைவசம் வைத்திருந்த 2 கேமராக்கள், ட்ரோன் ஆகியவற்றையும் சுக்குநூறாக அடித்து உடைத்ததோடு, அவர்களை கடத்தியும் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி சுமார் 50 அடியாட்களை வைத்து தாக்குதல் நடத்த வைத்ததாகக் காயமடைந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழல் இருந்து வந்தது.

இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸ் தங்கையா உத்தரவின் பெயரில், குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பத்திரிகையாளர்களை மீட்கச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கதிரவன், கேமராமேன் செபாஸ்டின் உள்ளிட்ட இருவரையும் குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

எம்.எல்.ஏ பழனியாண்டி

மேலும், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவரும் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கிய எம்.எல்.ஏ தரப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ``கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா?

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க