செய்திகள் :

குழந்தை பெற கைதிக்கு பரோல் கேட்ட மனைவி: `குழந்தை களங்கத்தை சுமக்க நேரிடும்'- நீதிபதிகள் கருத்து

post image

சிவகங்கை மாவட்​டம் திருப்​பாச்​சேத்தி பகு​தி​யைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில," என் கணவர் மதுரை மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​டனை கைதி​யாக உள்​ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்​கொள்ள விரும்​பு​கிறேன். இதற்​காக கரு​வுறு​தல் சிகிச்சை மேற்​கொள்​வதற்​காக என் கணவருக்கு போலீஸ் பாது​காவலர்​கள் இல்​லாமல் 21 நாட்​கள் சாதாரண பரோல் விடு​முறை வழங்​கக்​கோரி மதுரை சிறைத்​துறை கண்​காணிப்​பாளரிடம் மனு அளித்​தேன்.

என் மனுவை சிறை கண்​காணிப்​பாளர் நிராகரித்து உத்​தர​விட்​டார். அந்த உத்தரவை ரத்து செய்​து, எனது கணவருக்கு 21 நாட்​கள் பரோல் விடு​முறை வழங்க உத்​தர​விட வேண்​டும் " என மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இது தொடர்பாக சிறைத்​துறை கண்​காணிப்​பாளர் தாக்கல் செய்த மனு​வில், ‘‘மனுதா​ரர் அவரது கணவருக்கு விடுப்பு கேட்ட காரணம் உண்​மை​யானது. அதே சமயத்தில்​ 'அவரை விடு​வித்​தால் அவரது உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்பட வாய்ப்​புள்​ளது, எனவே விடுப்பு வழங்கக் கூடாது' என நன்னடத்தை அலுவலர் அறிக்கை அளித்​துள்​ளார். கைதிக்கு பரோல் வழங்​கி​னால் சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​பட​ வாய்ப்புள்ளதோடு, கைதிக்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்களுக்​கும் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட​வும் வாய்ப்​புள்​ளது.

எனவே, விடுப்பு வழங்​கக் கூடாது என திருப்​பாச்​சேத்தி காவல் ஆய்வாளர் கூறி​யுள்​ளார். இவர்​களின் அறிக்கை அடிப்​படை​யில் கைதி​யின் விடுப்பு கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டது’’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனை கேட்ட, என்​.ஆனந்த் வெங்​கடேஷ், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் ," தண்​டனை பெற்​றவர் மூலம் ஒரு குழந்​தையைப் பெற்​றெடுப்​பதற்​கான மனு​தா​ரரின் உரிமையை கருத்​தில் கொள்ள வேண்​டி​யுள்​ளது.

இந்த வழக்​கில் மனு​தா​ரரும் தண்​டனை பெற்​றவரும், குழந்தை பிறப்புரிமையை வசதியாக புறக்கணிக்​கின்​றனர். குழந்தை இவ்​வுலகில் நுழை​யும்​ போது 3 கொலைகள் உள்​ளிட்ட கொடூர​மான குற்​றங்​களைச் செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 'ஒரு கைதி​யின் குழந்தை' என்ற களங்​கத்துடன் வளரும்.

மனு​தா​ரர் கோரிக்​கையை அனு​ம​தித்​தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்​லாமல் வாழ்​நாள் முழு​வதும் ஒரு களங்​கத்​தைச் சுமக்​கும். குழந்​தையை பெற்று வளர்ப்​ப​தற்கு மனு​தா​ரருக்​கோ, தண்​டனை கைதிக்கோ உரிமை​யில்​லை. இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்​காணிப்​பாளர் பிறப்பித்த உத்​தர​வில் தவறில்லை. அதில், நீதி​மன்​றம் தலையிட வேண்​டிய​தில்​லை. மனு தள்​ளு​படி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News Today live update

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!AG&Pratham CNG Stationபெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில... மேலும் பார்க்க

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார... மேலும் பார்க்க

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம். அமைச்சகம் என்ன சொல்கிறது? வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா ச... மேலும் பார்க்க