செய்திகள் :

``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு

post image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இன்று (நவ.5) சென்னை மாமல்லபுரத்தில் த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது.

த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

இதில் பேசியிருக்கும் த.வெ.க கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், "கஷ்டப்பட்டு தேர்வு எழுதி தேர்வாகி பணிநியமனத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திகூட ஊழல் செய்கிறது திமுக.

இப்போ சமீபத்துல அன்பில் மகேஷ், 'படிச்சு படிச்சு சொன்னோமே, கண்டிஷன பாலோ பண்ணுங்க, கண்டிஷன பாலோ பண்ணுங்கனு' ஒரு பர்பாமன்ஸ் பண்ணார்.

அதுமாதிரி கே.என்.நேரு அண்ணன் கிட்ட, 'படிச்சு படிச்சு சொன்னமே, ரூல்ஸ பாலோ பண்ணுங்க, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு. இப்போ பாருங்க தேவையில்லாம ED உள்ள வந்துருச்சு' னு நாமெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு. இளைஞர்கள் எதிர்காலத்தில் விளையாடாதீங்க.

இலவச பஸ், மகளிர் உரிமைத் தொகை இதைத் தவிர திமுக என்ன செய்திருக்கிறது.

அதை திமுகவின் கஜானாவில் இருந்து கொடுத்தால் பெருமை பேசலாம். அது அரசின் பணம். அதை கொடுத்து விட்டு பெருமையாக பேசுவதா?

இலவசங்கள் யாருக்கு தேவையோ அவர்களுக்கு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதைவைத்து அரசியல் செய்வது ஜனநாயக சீர்கேடு.

இலவசங்களுக்கு தனி ஆணையம் அமைக்கலாம். அதில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் கூட உறுப்பினராக கூட இருக்கலாம். தேவையான மக்களுக்கு மட்டும் இலவசங்களை கொடுக்கலாம்.

தவெக அருண்ராஜ்
தவெக அருண்ராஜ்

தமிழ்நாடு காவல்துறைக்கு ரெகுலர் டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. இதைகூட செய்யாமல் முதல்வருக்கு வேறு என்ன பெரிய வேலை இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்ற நிலையில் இருக்கும் டிஜிபியால் எப்படி ஸ்ட்ராங்கான முடிவெடுக்க முடியும்?

அரசியல் பரபரப்புக்காக என்கவுண்டர்கள் செய்கிறார்கள். என்கவுண்டர்கள் நீதி கிடையாது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே என்கவுண்டர்கள் செய்யப்படுகிறது.

காவலர்களின் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. போதுமான அளவுக்கு காவலர்கள் பணியமர்த்தியிருக்கிறார்களா?

கரூர் நிகழ்வுக்குப் பிறகு எவ்வளவோ சவால்கள், தடைகள், அவதூறுகளைப் பரப்பி தவெகவை முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். இது காசுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தவெக அதை எந்த சதியாலும் அழிக்க முடியாது.

மக்களுக்காக இன்னும் வீரியத்துடன் தீவிரமாக இயங்குவதே நாம் கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார் அருண்ராஜ்.

வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைப்பதற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நத... மேலும் பார்க்க

"தெலுங்கு மக்களுக்கு NTK எதிரியல்ல; 12 தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம்" - சொல்கிறார் கார்த்திகைச்செல்வன்

'சாதி பார்த்து விழும் வாக்குகள் எனக்கு தீட்டு' எனப் பேசிவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களையே பெரும்பாலும் சாதி பார்த்துதான் தேர்வு செய்... மேலும் பார்க்க

``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓபன் குற்றச்சாட்டு!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலித் மற்றும் முதல் பௌத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோதுதான், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்து... மேலும் பார்க்க

தென்காசி: "நான் பாட்டு கேட்கும் ரேடியோவை திருடிட்டாங்க" - ஆட்சியரிடம் 95 வயதான மூதாட்டி புகார்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ஆதி லட்சுமி.இவர் தனிமையில் வசித்து வருவதால் பொழுதை போக்குகின்ற வகையில் ரூபாய் 700 கொடுத்து ரேடியோ ஒன்று வாங்கி அதன்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 10... மேலும் பார்க்க