செய்திகள் :

கொடநாடு வழக்கு: சாட்சியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு - இருவரை விடுவித்த நீதிமன்றம்; பின்னணி என்ன?

post image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச்‌ சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பாக ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சயான் மற்றும் வாளையார் மனோஜ்

காவல்துறை தரப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சிகளில் ஒருவராக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊட்டியில் தங்கியதாக கூறப்படும் தனியார் காட்டேஜ் உரிமையாளர் சாந்தா என்பவரை பட்டியலில் இணைததனர்.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக சாட்சி அளிக்கக்கூடாது என குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர்களான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தம்மை தொடர் கொண்டு மிரட்டியதாக 2020 - ம் ஆண்டு சாந்தா ஊட்டி பி1 காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சயான் மற்றும் வாளையார் மனோஜ்

இது தொடர்பான வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் விடுவிப்பதாக மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது.

இது குறித்து பேசிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள், "கொடநாடு வழக்கில் A1 , A2 - வாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் இருவரும் ஜாமீனில் வெளியே இருந்தால் முக்கிய மூளையாக செயல்பட்டவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால்,

சயான் மற்றும் வாளையார் மனோஜ்

அப்போதிருந்த எடப்பாடி அரசு காவல்துறையை வைத்து பொய்யான இந்த மிரட்டல் வழக்கை ஜோடனை செய்தது. ஆனால், காவல்துறையால் அதற்கான சான்றுகளை நிரூபிக்க முடியவில்லை. உண்மைத்தன்மையை விசாரணை நடத்திய மகிளா நீதிபதி அவர்கள் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை அளித்திருக்கிறார்" என்றனர்.

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க