சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்...
"கொலை முயற்சி தாக்குதல்; அன்புமணி தான் காரணம்" - பாமக எம்.எல்.ஏ அருள்
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்களை பா.ம.க, எம்.எல்.ஏ அருள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பா.ம.க கட்சியின் நிர்வாகி தந்தையின் இறப்பு நிகழ்விற்கு சென்றுவிட்டு வரும் வழியில், சோளகாட்டில் அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் என்பவர் மற்றும் சடையப்பன் உள்ளிட்ட 15 பேர் திடீரென வந்து தாக்குதல் நடத்தினர். நாங்கள் 25 கார்களில் 150 பேர் சென்றிருந்தோம். அப்போது கல்லால் காரின் மீது தாக்குதல் நடத்தினர். காரை நிறுத்தியபோது, தொடர்ந்து வண்டிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதற்கான காரணம் என்னவென்றால், சேலத்தில் பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழுவிற்கு வரவேற்பு பிரமாண்டமாக கொடுக்கப்பட்டது. இதற்கு அன்புமணியால் தாங்க முடியவில்லை, இதற்கு யார் காரணம், அருள் என்பதால் அவரைக் கொன்று விடுங்கள் என்று மூன்று பேர் கத்தியுடன், 5 பேர் இரும்பு பைப்புடன், ஐந்து கார்களை அடித்து நொறுக்கி உள்ளனர். என்னை நோக்கி கத்தி எடுத்து வந்து, உன்னை அன்புமணி கொலை செய்ய சொல்லிவிட்டார். அன்புமணி கொலை செய்ய சொன்னார் என்று கத்தி எடுத்துக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். அப்பொழுது என்னுடன் இருந்த நிர்வாகிகள் என்னை காப்பாற்றினார்கள். பெற்றெடுத்த தந்தையையே கொலை செய்ய வேண்டும் என்று செயலாற்றிக் கொண்டிருக்கின்ற அன்புமணி, என்னை கொலை முயற்சி செய்வதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

கடந்த 25 ஆண்டுகளாக அன்புமணியுடன் ஊர் ஊராக சென்று கொடியேற்றி உள்ளோம்.. இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்திருந்தோம். நானும் அறிவுச்செல்வனும் தான் சென்றோம்... அறிவுச்செல்வன் இறந்ததற்கு காரணம் விரைவில் விடுகிறேன்.. என்னை சீண்டிக்கொண்டே இருந்தால் அன்புமணி பற்றி பல உண்மைகள் தெரியும்.. அனைத்தையும் வெளியே சொல்வேன் யாருக்கும் பயந்து கொள்ளமாட்டேன்... தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது பத்து காவல்துறையினர் வந்தார்கள், கத்தியை எடுத்தவுடன் காவல்துறையினரும் பயந்து கொண்டுவிட்டனர், அவர்களும் மனிதர்கள் தானே... என்னை அடித்துக் கொன்றாலும், எனது தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி கையால் இறப்பதாக நினைத்துக் கொள்கிறேன். எங்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ரவுடி கூட்டத்தை அன்புமணி அனுப்புகிறார் என்றால் மிகவும் வருத்தமாக உள்ளது. என் மீது தாக்குதல் நடத்துவதற்கு அன்புமணி தான் காரணம். அவர் தூண்டுதலின் பேரில் அவர் சொல்லி தான் இவ்வாறு செய்துள்ளனர்.. நேற்று இரவு நான் இரங்கல் காரியத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டேன். அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாக கூறிவிட்டனர். நாங்கள் தாக்கிவிட்டதாக கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.. நாங்கள் யாரையும் பார்க்கவில்லை... எனது கார் முழுவதும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இவ்வளவு சம்பவம் நடந்தும் காவல்துறை எந்தவித பாதுகாப்பும் எனக்கு வழங்கவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலைத்தில் புகார் அளித்தாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.














