செய்திகள் :

கொளுத்தும் வெயிலில் எகிறும் மின் கட்டணம்... கவலையே வேண்டாம், குறைக்க இதோ சூப்பர் வழி!

post image

மின்சார உபகரணங்கள் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதும், அதனால் மின் கட்டணங்கள் உயரும் என்பதும் பல நடுத்தர மக்களிடம் கவலையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க சரியான வழி சோலார் மின் உற்பத்தி. இனி நாம் அனைவருமே நம் வீட்டிலேயே சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம்.

சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

மின் கட்டணம்

ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற அருமையான திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேலான குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ஆனால், இதில் அதிகமானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். குஜராத்தில் 6 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடன், டார்லிங் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

மின் கட்டணம்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 18-ம் தேதி புதுச்சேரியில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன். மேலும் இந்த நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சி விவரங்கள்:

Date: ஏப்ரல் 18, 2026, Time: மாலை 6.00 - 8.00

முகவரி: Shenbaga Hotel & Convention Centre, No.432, MG Road, Muthialpet, Puducherry 605003

மின் கட்டணம்

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் டார்லிங் நிறுவனம் வழங்கும் நிச்சயப் பரிசு உள்ளது. பதிவு செய்ய: https://events.vikatan.com/505-solar-awareness-meet/

டூத் பிரஷ்ஷில் `கலர் கலர்' Bristles எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 17

டூத் பிரஷ் வாங்கும் போது, அதன் முள்ளரும்புகள் (Bristles) பல வண்ணங்களில் இருப்பதை கவனித்திருப்போம். இது அழகிற்காகச் செய்யப்பட்ட வடிவமைப்பு அல்ல. இதற்குப் பின்னால் நம் ஆரோக்கியம் சார்ந்த காரணம் ஒளிந்திர... மேலும் பார்க்க

தாய்லாந்துக்குப் போக இது கட்டாயமா? - சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தாய்லாந்து ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலமாக இருந்தாலும், சமீபகாலமாக அந்நாட்டு அரசு ஒரு பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் விபத்துகளில் சிக்கினாலோ அல்லது திடீர் உடல்நலக் குறை... மேலும் பார்க்க

`குடும்பத்தில் நான் ரியாக்ட் பண்ணும்போது, 'ரகசியமாக பேச ஆரம்பித்தார்கள்' | மருமகளின் `பேசும் மனசு' 5

“எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்கிறோம். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. புதிய வீடு, புதிய மனிதர்கள் என்றாலும், எல்லோருடனும் பழக முயற்சி செய்... மேலும் பார்க்க

லிஃப்டில் (Lift) கண்ணாடி வைப்பது எதற்காக? - இது தெரியாமப் போச்சே?! - 14

லிஃப்ட்களில் பயணம் செய்யும்போது நம்மில் பலரும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி செல்வது வழக்கம். ஆனால், கண்ணாடி வைக்கப்பட்டதன் பின்னணியில் உளவியல் தந்திரமும், அறிவியல் காரணங்களும் உள்ளன. உலகெங்கும் உய... மேலும் பார்க்க

"முதல்வர், திருமாவளவன் கொடுத்த அலெர்ட்! 15 மாசத்துல 38 கிலோ வெயிட் லாஸ் செஞ்சேன்" - டாக்டர் ஷர்மிளா

சின்னத்திரை பிரபலம் டாக்டர் ஷர்மிளா 15 மாதங்களில் எவ்வித குறுக்குவழிகளையும் முயற்சிக்காமல் இயற்கையாக 35 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். அவருடைய கணவரும் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜியும் இவருடன் இணைந்து... மேலும் பார்க்க

குல்லாய் உச்சியில் இருக்கும் மென்மையான பந்து எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 12

குளிர்கால குல்லாய்களின் (Beanies / Winter hats) உச்சியில் வைக்கப்படும் அந்த மென்மையான நூல் பந்து, இன்று ஃபேஷனுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், இதன் பின்னணியில் சுவாரசியமான வரலாற்று காரணம் உள்ளது. பிரெஞ்... மேலும் பார்க்க