செய்திகள் :

கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?

post image

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ் என்பவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது, கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எறிய தொடங்கியது.

தீ விபத்து
தீ விபத்து

அப்போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதனால் அடுத்தடுத்து இருந்த 4 ஓட்டு வீடுகள் தீக்கிரையாகின. இதில் ஒரு வீட்டில் இருந்த 50,000 பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை எரிந்ததாகக் கூறப்படுகிறது. 

தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிற்குள் இருந்தவர்கள் உடனடியாக, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்து குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் பெர்ஹ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க