செய்திகள் :

``கோவை ஒவ்வொரு பூத்திலும் 50% வாக்கு டார்கெட்'' - செந்தில் பாலாஜி

post image

கோவை திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும். அந்தந்த பூத்களில் உள்ள இளைஞரணி, மகளிரணி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.

 பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்.

கோவை
கோவை

எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு.

எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்.

வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள்.

திமுக தலைமையகம்
திமுக தலைமையகம்

கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் பாதாள சாக்கடை பணிகள் செய்யவில்லை. பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்ததும் தார் சாலைகள் போடப்படும்.” என்றார்.

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்த... மேலும் பார்க்க