செய்திகள் :

கோவை: பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான காவலர் பணியிடை நீக்கம்

post image

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணை பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார்.

அவர் வேலை விஷயமாக நேற்று காலை பொள்ளாச்சிக்குச் சென்றார். பின்னர் காவலர் மணிவேந்தன் பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் கோவை திரும்பினார். அப்போது அவர் காவலர் சீருடையில் இருந்தார்.

இந்நிலையில் அவர் பயணித்த பேருந்து கிணத்துக்கடவு நிறுத்தத்தில் நின்றபோது, கல்லூரி மாணவிகள் பலர் ஏறியுள்ளார்கள். அப்போது மணிவேந்தன் கோவையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஏற உதவி செய்தார். பின்னர் அந்த மாணவி பேருந்தில் ஏறி உள்ளே வந்தார்.

அச்சமயத்தில் பேருந்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்தக் கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காவலர் மணிவேந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செய்வது அறியாமல் திகைத்தார்.

பின்னர் மதுக்கரை காவல் எல்லையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், மாணவி அதிலிருந்து கீழே இறங்கினார். அங்கு இருந்த சக மாணவிகளிடம் தெரிவித்தார். அவர்கள் காவலரைக் கண்டித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தன் பெற்றோரிடமும் தெரிவித்தார். 

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவலர் பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிவேந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் துறை ரீதியாக மணிவேந்தனைப் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க