ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன...
கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 2-ம் தேதி கோவை விமான நிலைத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இரவு 11 மணியளவில் இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கொண்ட கும்பல், கார் கண்ணாடியை உடைத்து வினீத்தை கத்தியால் சரமாரியாக குத்தி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.



அரசுத் தரப்பில் 72 சாட்சிகளாக விசாரித்தனர். சாட்சி விசாரணை மற்றும் அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன. இதுதொடர்பாக 270 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா செய்தியாளர்களிடம், “பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.


அன்றைய தினம் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோதுதான் அவர்கள் 2 பேரையும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். சம்பவம் நடைபெற்ற 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



















