Iran war: புதிய Supreme Leader - யார் இந்த Mojtaba Khamenei? | Decode | Middle E...
கோவை: வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்.. திருமணம் மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்; அதிர்ந்த போலீஸ்
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் – சரண்யா காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அண்மை காலமாக கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் சரண்யா, கணவர் சதீஷை பிரிந்து தன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகளை பாரப்பதற்காக சதீஷ் அவ்வபோது மனைவியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே சரண்யாவுக்கு அவரின் உறவினர் முருகன் என்பவருடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சதீஷ்குமாருக்கு தெரிந்து குடும்பத்தில் பிரச்னை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சதீஷ் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.

பிறகு குழந்தைகளை பார்ப்பதாக சொல்லி சரண்யா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சதீஷ் வந்த தகவலை சரண்யா முருகனிடம் கூறியுள்ளார்.
சதீஷ் அங்கிருந்து புறப்பட்ட சென்றபோது, எதிரில் காரில் வந்த முருகன் உள்ளிட்ட 4 பேர் அவரை கடத்தி சென்றனர். காரில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு, சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு பீர் பாட்டிலால் அவரை கடுமையாக தாக்கி பிஏபி வாய்க்காலில் தள்ளியுள்ளனர்.

சதீஷ் மாயமாகிவிட்டதாக அவரின் தந்தை மயில்சாமி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனிடையே சதீஷின் சடலம் திருப்பூர் அருகே மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் கைது செய்தனர்.



















