செய்திகள் :

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

post image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம் என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு அண்மையில் வந்தபோது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படும் 42 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இல்லாவிட்டால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, தலமலை,கோ்மாளம் மற்றும் ஆசனூா் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சார்பில் ஜனவரி 6-ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், விடுதி உரிமையாளா்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களையும் சமா்ப்பிக்கவில்லை.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கோ்மாளம், தலமலை மற்றும் ஆசனூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், "சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 விடுதிகளுக்கு சீல் வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்,சம்பந்தப்பட்ட விடுதிகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் உரிய பதில் தராததால், 42 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதி உரிமையாளா்கள் முறைப்படி விண்ணப்பித்து உரிய அனுமதியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றனர்.

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க

''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம். போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்... மேலும் பார்க்க

RBI: அமெரிக்காவை நம்பாத இந்தியா; தங்கம் பக்கம் ரூட்டை மாற்றுவது ஏன்?

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி... தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு... என நம்மை சுற்றி பல பொருளாதார விஷயங்களும், மாற்றங்களும் நடந... மேலும் பார்க்க

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல" - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ... மேலும் பார்க்க