சிறை: "நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு
சவூதி தீவில் சொகுசு வில்லாக்களை வாங்கிய ரொனால்டோ - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது.
மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருந்தார்.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தீவு ஒன்றில் ரொனால்டோவும், அவரின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் இணைந்து இரண்டு வில்லாக்களை வாங்கியிருக்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சவூதி அரேபியாவின் கடற்கரையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, நுஜுமா என்ற தீவு.

இந்த தீவில் தான் இரண்டு சொகுசு வில்லாக்களை வாக்கியிருக்கின்றனர். சுற்றி கடல் நீர், பிரகாசமான பவளப் பாறைகள் மற்றும் பரந்து விரிந்த வெண்மையான மணல்கள் இந்தத் தீவின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
இந்த நுஜுமா தீவில் மொத்தம் 19 வில்லாக்கள் உள்ளன. கடற்கரை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகள் முதல் உள்ளூர் கைவினைப் பொருள்களை வரை எல்லாம் இந்த தீவில் இருக்கின்றன.
























