செய்திகள் :

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

post image

சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தினை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். புகழ்பெற்ற இவ்வலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா.

இங்கு சித்திரைத் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் சாரங்கபாணி சுவாமி மற்றும் ஸ்ரீதேவி ,பூமிதேவி ஆகியோர் பக்தர்களுக்குச் சேவை சாதித்தனர். தேரினை ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க

பிரபல தமிழ் நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் மோகன்லால்?

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்த... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது.இலங்கையிலிருந்... மேலும் பார்க்க

கேரளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமானது துடரும்!

மோகன்லாலின் துடரும் திரைப்படம் கேரளத்தில் அதிக வசூலை ஈட்டியுள்ளது.இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வ... மேலும் பார்க்க

ஏஸ் டிரைலர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக... மேலும் பார்க்க