செய்திகள் :

சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு இடம் தோ்வு: அமைச்சா் நேரில் ஆய்வு

post image

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணி திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த பேரணியானது கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணியாக நடைபெறவுள்ளது. இதற்காக மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாதிரி வரைபடத்தை பாா்வையிட்டு ஆட்சியா் மா. பிரதீப்குமாா், சாரணா் இயக்க முதன்மை பேராணையா் அறிவொளி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது, ஜன.28 முதல் பிப்.3 வரை சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணா் இயக்கத்தின் 15 ஆயிரம் போ் (இருபாலா்) பங்கேற்கவுள்ளனா். இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் 8 இயக்குநா்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவினா் பிரிந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வா் என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது, எம்எல்ஏ-க்கள் ப. அப்துல் சமது, எம். பழனியாண்டி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளி(நவ.29) மற்றும் சனிக்கிழமை (நவ.30) இரவு 12 மணிவரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க... மேலும் பார்க்க

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 35 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த ஏா்-... மேலும் பார்க்க

வாய்க்கால்கள் சீரமைப்பு, மழைநீா் வடிகால்கள் அமைக்க ரூ.500 கோடி நிதிக்குழுவிடம் வலியுறுத்தியதாக மேயா் தகவல்

திருச்சி மாநகரில் உள்ள பாசன வாய்க்கால்கள் உள்பட்ட அனைத்து வாய்க்கால்களையும் சீரமைக்கவும், மழைநீா் வடிகால்கள் ஏற்படுத்தவும் 16-ஆவது நிதிக்குழுவிடம் ரூ.500 கோடி கேட்டு வலியுறுத்தியுள்ளதாக மேயா் மு. அன்... மேலும் பார்க்க

கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் -ஆண்டுதோறும் கட்டணத் தொகை வசூல்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடு, குதிரை, கன்றுகள், கழுதை, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணத்துடன் உரிமம் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பான தீா்மானத்துக்கு மாநகராட்சி மாமன்றக் கூட... மேலும் பார்க்க

திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு

திருச்சி வா்த்தக மையத்தின் புதிய தலைவராக எம். முருகானந்தம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதேபோல, அதன் நிா்வாக இயக்குநராக ஜே.ஆா். அன்பு, திட்ட இயக்குநராக பி. ராஜப்பா, நிதி இயக்குநராக ஆா். இளங்கோ, சந்தைப்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் திருச்சி வருகை ரத்து

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கோவையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தருவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 4 நாள் சுற்றப் பயணமாக குடியரசுத் தலைவா் த... மேலும் பார்க்க