செய்திகள் :

சிபிஎம்-மின் ஃபேவரைட் `அரூர்' தொகுதியைப் பெற விசிக ஜரூர்! - திமுக-வின் கணக்கு என்ன?!

post image

தங்களுக்கு சாதகமான தொகுதி என்ற அடிப்படையில் அரூரை குறிவைத்து சிபிஎம், தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், அத்தொகுதியை பெற்றே தீர வேண்டும் என்ற இலக்கோடு விசிக-வும் காய் நகர்த்தி வருவது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் தருமபுரி மாவட்ட அரசியல் நோக்கர்கள்.

சட்டமன்றத் தேர்தல்

தருமபுரி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அரூர் (தனி) தொகுதி முக்கியமானது. 1967 தேர்தலிலிருந்து காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ள இத்தொகுதியில், சிபிஐ 2 முறையும், சிபிஎம் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரம், அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது மட்டுமன்றி 2016, 2019 (இடைத்தேர்தல்), 2021 தேர்தல் என தொடர்ந்து வெற்றி பெற்று தொகுதியில் செல்வாக்குடன் உள்ளது.

ஆனாலும், தங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஆதரவோடு கடுமையாக பணி செய்து இந்தமுறை எப்படியும் வென்று விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ள சிபிஎம், அரூரை விருப்ப பட்டியலில் வைத்துள்ளது.

அதே நேரம், தருமபுரி மாவட்டத்தில் தங்கள் சட்டமன்றக் கணக்கை தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக முயன்று வரும் விசிக-வினர் அரூரை கேட்டுப் பெற வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அரூரை அடுத்த ஈச்சம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விசிக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, "நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விசிக-வுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். அதிலும் தருமபுரி மாவட்டத்தில் அரூர் தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

எஸ்.எஸ்.பாலாஜி
எஸ்.எஸ்.பாலாஜி

அரூர் தொகுதியை குறிவைக்கும் விசிக-வின் இந்த முயற்ச்சி, கருத்தியல் ரீதியாக இணைந்து செயல்படும் சிபிஎம்-விசிக கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் முரண்பாட்டை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகளோ, "அரூரை கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் ஒதுக்க வேண்டாம், திமுகவே போட்டியிட வேண்டும், மூன்று முறை வெற்றிபெற்றுள்ள அதிமுக-வை வெல்ல வேண்டுமென்றால் திமுக அங்கு போட்டியிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், 2019 இடைத்தேர்தலில் அதிமுக 88,632 வாக்குகளும், திமுக 79,238 வக்குகளும் பெற்றது. அதேநேரம் 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் 68, 699 வாக்குகள்தான் பெற்றது. அதிமுகவோ 99,061 வாக்குகள் பெற்றது, அதுமட்டுமன்றி அமமுக தனியாக நின்று14,327 வாக்குகள் பெற்றது, இவ்வளவு எதிர் வாக்குகள் உள்ள நிலையில், தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக-வும் சேர்ந்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும். இப்படியான சூழலில் மீண்டும் சிபிஎம்மோ, புதிதாக விசிக-வோ போட்டியிட்டால் சரியாக வராது, திமுக-வே நேரடியாக களம் கண்டால்தான் அதிமுக-வுக்கு டஃப் கொடுக்க முடியும், இதை தொகுதி பொறுப்பாளர்கள் மூலம் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம்" என்கின்றனர்.

தேர்தல்
தேர்தல்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களை தாஜா செய்து வாக்குகள் பெறும் பணியைவிட கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்து தொகுதிகளை ஒதுக்கும் பணிதான் திமுக-வுக்கு பெரும் பணியாக இருக்கும்.

`விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு தவெக ஒரு சான்று' - விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு

சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் ப... மேலும் பார்க்க

'தேர்தல் நேரத்தில் போராடுவது பேஷன் ஆகிவிட்டது!' - அமைச்சர் மா.சு சர்ச்சைப் பேச்சு!

சென்னை திருவான்மியூரில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் நிகழ்வு நடந்திருந்தது. இதில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பணி நிரந்தரம் கேட்டு ... மேலும் பார்க்க

ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலே, தோல்வி தான் தெரியுமா?! | Vote Vibes 05

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன். இவருக்கு அரசியல் என்ட்ரி ஈசியாக கிடைத்திருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள... மேலும் பார்க்க

கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை" - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அ.தி.மு.க அடிப்... மேலும் பார்க்க

OPS : `நான் ரெடி... டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி

தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர... மேலும் பார்க்க