செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவருக்கு `மரண தண்டனை'- 60 நாள்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

post image

புனே அருகில் உள்ள நஸ்ராபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சிறுமி விடுமுறைக்காக ​​தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். அச்சிறுமியை, குற்றம் சாட்டப்பட்ட பீமாராவ் காம்ப்ளே (65) என்ற முதியவர், சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு வரவழைத்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.

சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். பின்னர் அவரின் உடல் அந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்த மாட்டுச் சாணத்தில் புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பீமாராவ் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நஸ்ராபூரில் உள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். புனேவின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்த 16 நாள்களுக்குள் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்றம் மே 28 அன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கருணை காட்டும்படியும், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த 20ம் தேதி அன்று இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

கடந்த 25ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் அதிக அளவில் மக்கள் கூடியிருந்தனர். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி சாலுங்கே, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கேட்டு கோர்ட்டில் கூறி இருந்த மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சம்பவம் நடந்து 60 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" - டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் ப... மேலும் பார்க்க

'கிராம மயானத்தை வேறு உள்ளாட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது' - உயர்நீதிமன்றம் உத்தரவு

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: `புதிய அரசின் நிலைப்பாடு என்ன?' - உச்ச நீதிமன்றம் | விசாரணை முழு விவரம்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி குமாரி மகா சபா என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்... மேலும் பார்க்க

எ.வ.வேலு விவகாரம் : `நீங்க ஆளுங்கட்சியாக இருந்தபோதும் இதை தானே.!' - நீதிபதிகள் சுவாரஸ்ய கமெண்ட்

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில்,... மேலும் பார்க்க

தமிழகப் பசு வதைத் தடை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் பெரும் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருந்த பசு வதைத் தடை விவகாரத்தில், தற்பொழுது உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.பக்ரீத் பண்டிகை உள்ளிட்ட எந்தவொரு நா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை : நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்! - நடந்தது என்ன?

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் நீதிபதிகள் அமர்வை நோக்கி ஆவணங்களை வீசி எறிந்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ காவல்துறை அதிகாரிக்கு எதிராக ... மேலும் பார்க்க