புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி' மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக க...
'சென்னை அணியின் கலாச்சாரத்தை வடிவமைத்தவர்!' - சி.எஸ்.கே பயிற்சியாளர் ப்ளெம்மிங் விலகல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ப்ளெம்மிங் விலகியிருக்கிறார்.

சென்னை அணியின் நிர்வாகமும் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், 'ப்ளெம்மிங்குடனான 18 ஆண்டுகால அசாத்திய பயணம் மறக்க முடியாதது. சென்னை அணியின் தொடக்கக் காலத்திலிருந்து அவர் எங்களுடன் பயணித்தார்.
வீரர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வருவதில் ப்ளெம்மிங் வல்லவர். சென்னை அணியின் கலாச்சாரத்தை வடிவமைத்ததில் ப்ளெம்மிங்கின் பங்கு இன்றியமையாதது' என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ப்ளெம்மிங் கூறுகையில், 'சென்னை அணியிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன். சென்னை அணியுடன் பணியாற்றிய நாட்கள் அனைத்தும் பெருமைக்குரிய நாட்கள். ஒன்றாக இணைந்து வெற்றிகளை குவித்தோம். கடினமான நாட்களை கடந்து வந்தோம். அந்த நினைவுகளெல்லாம் என்றும் என் மனதில் நிற்கும். சென்னை அணி என் இதயத்துக்கு நெருக்கமானது. எப்போதும் சென்னை அணிக்கு என்னுடைய ஆதரவு உண்டு' எனக் கூறுயிருக்கிறார்.



















.webp)

