செய்திகள் :

சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அநாகரிகம்; போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை!

post image

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனக்கு நடந்த கொடுமையை கணவரிடம் கண்ணீர்மல்க கூறினார். உடனடியாக மனைவியை அழைத்துக் கொண்டு வேளச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்ற கணவர், நடந்தச் சம்பவத்தை புகாராக கொடுத்தார். அதன்பேரில் வேளர்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரின் பைக்கின் பதிவு நம்பர் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவர் தமிழக காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் மணிமாறன் என்று தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் மணிமாறன்

இவர் குடும்பத்துடன் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார். தற்போது ராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறையின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு வேளச்சேரி போலீஸார் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து, `சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆதாரங்கள் இருந்தால் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுங்கள்' என வேளச்சேரி போலீஸாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் மணிமாறனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் மணிமாறன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேளச்சேரி போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வேளச்சேரி போலீஸார் கூறுகையில், ``சென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய மணிமாறன், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதனால் அவர் ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனால் ராணிப்பேட்டையிலிருந்து அடிக்கடி வேளச்சேரிக்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன் வந்துச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று இன்ஸ்பெக்டர் மணிமாறன், தன்னுடைய உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றிருக்கிறார். அப்போதுதான் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன், இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இளம்பெண் அளித்த புகாரில் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க