செய்திகள் :

சென்னை: டெல்லி நபரைச் சந்திக்க வந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்- போலீஸில் புகார்!

post image

நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம், கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகில் ஆனந்தம் (45). இவர். பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் தோழியான பூங்குழலி, பா.ஜ.க-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பூங்குழலி, தன்னுடைய காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கோகில் ஆனந்தம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நானும் பூங்குழலியும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம். 26.03.2025-ஆம் தேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பூங்குழலி, சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி எனக்கு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் உதவுவதாகக் கூறியிருக்கிறார். அதோடு அவருக்குத் தெரிந்த முக்கிய நபர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதனால் அவரைச் சந்தித்துப் பேசினால் எம்.எல்.ஏ சீட் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க
பா.ஜ.க

அதைத் தொடர்ந்து என்னுடைய காரில் பூங்குழலி, தமிழ்ச்செல்வி, நான் என மூன்று பேரும் சென்னைக்கு 27.03.2026- ம் தேதி வந்து பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் இரண்டு அறைகளை எடுத்து மூன்று பேரும் தங்கினோம். அப்போது பூங்குழலியும் தமிழ்ச்செல்வியும் இந்த லாட்ஜ்ஜில் அறை சரியில்லை அதனால் வேறு லாட்ஜை பார்த்து விட்டு வருவதாகக் கூறி என்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வரவில்லை. இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை. எனவே என்னுடைய காரை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை எடுத்துச் சென்ற பூங்குழலி, தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு போலீஸார் கேட்டதற்கு, சென்னை வந்து என்ன நடந்தது என்பதை சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்த பிறகே உண்மை தெரியவரும் என பெரியமேடு போலீஸார் தெரிவித்தனர்.

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க