"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது ப...
சென்னை: ரெளடி கருப்பு, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது: நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - என்ன நடந்தது?
சென்னையில் உள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்தவர் கருப்பு (எ) தமிழ் அழகு.
இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. இதனால், இவர் காவல்துறையின் 'A' பிரிவு பட்டியலில் இருக்கும் ரெளடி ஆவார்.
கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி தான் இவரின் பிரதான தொழில்கள்.
கருப்பு குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து போலீசார் கருப்பை பிடிக்க சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கே கருப்பு மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த ஆகாஷ் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
தங்களைப் பிடிக்க போலீஸ் வந்துள்ளது என்பதை தெரிந்ததும், இருவரும் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
பின்னர் கருப்பு தலைமை காவலர் விஜயகுமாரை வலது கையில் வெட்டிவிட்டு தப்ப முயன்றிருக்கிறார்.
தப்பித்துவிடக் கூடாது என்பதால், திருமுடிவாக்கக் காவல் ஆய்வாளர் இருப்பின் வலது கணுக்காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்.
முதலில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருப்பு, தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருப்பு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





















