``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதி...
சென்னை: வடமாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை? - கணவன், குழந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட கொடூரம்
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சாக்குமூட்டையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. அந்த மூட்டையை தெருநாய்களும் சுற்றிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள், அதைக் கவனித்தனர். உடனடியாக அடையாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர்.
பின்னர் மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது 30 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இருந்தார். இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலமாக கிடந்த இளைஞர் யார் என்று விசாரித்தனர்.
விசாரணையில் அவரின் பெயர் கௌரவக்குமார்(24), பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை தேடி மனைவி, குழந்தையோடு கௌரவக்குமார், சென்னை வந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதனால் கௌரவக்குமாரின் மனைவி, குழந்தை குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
அப்போது, அதிர்ச்சி தகவலாக அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அவர்களை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மூன்று கொலைகள் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``பீகாரைச் சேர்ந்த கௌரவக்குமார், தன்னுடைய மனைவி முனிதா, குழந்தை ஆகியோரை அழைத்துக் கொண்டு 24.1.2026-ம் தேதி வேலைக்காக சென்னை வந்திருக்கிறார். பின்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (60)என்பவரை வேலைநிமித்தமாக கௌரவக்குமார் சந்தித்து பேசியிருக்கிறார்.
அதன்பிறகு கிருஷ்ணபிரசாத், கௌரவக்குமாரை அடையாறில் உள்ள செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன்பிறகு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கௌரவக்குமார், அவரின் குடும்பத்தினரை கோட்டூர்புரம் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிக்கந்தரின் ஏற்பாட்டில் கௌரவக்குமார், அவரின் மனைவி, குழந்தை ஆகியோர் தங்கியிருக்கிறார்கள்.

அப்போது முனிதாவிடம் சிக்கந்தர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. அதை கௌரவக்குமார் தடுத்தபோது அவரை அடித்து கொலை செய்திருக்கிறார். அதன்பிறகு முனிதாவிடம் தவறாக நடந்ததாக தெரிகிறது. அப்போது இடையூறாக இருந்த குழந்தையையும் கொலை செய்யப்பட்டுள்ளது. பின்னர் முனிதாவையும் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எங்களின் சந்தேக வளையத்தில் சிக்கந்தர், கிருஷ்ணபிரசாத் உள்பட ஏழு பேர் உள்ளனர்.
இதில் கௌரவகுமாரின் சடலம் அடையாறில் கிடைத்திருக்கிறது. முனிதா, குழந்தைகளின் சடலத்தை கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் வீசியதாக சிக்கந்தர் தகவல் தெரிவித்தன்பேரில் அங்கு போலீஸ் டீம் தேடிவருகிறது. இந்த வழக்கில் சிக்கந்தருக்கு உதவியாக விகாஷ் என்பவர் இருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

















