செய்திகள் :

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

post image

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார்.

இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் தூரத்து உறவினர் மணிபாரதி. இவர் அடிக்கடி நர்ஸின் உறவினர் வீட்டுக்கு வருவதுண்டு.

25.04.2026-ம் தேதி நர்ஸின் உறவினர்கள், கோயிலுக்குச் சென்றுவிட்டனர். அதனால் வீட்டில் தனியாக நர்ஸ் இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மணிபாரதியும் , நர்ஸும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மணிபாரதி
மணிபாரதி

திடீரென நர்ஸைத் தகாத உறவுக்கு மணிபாரதி அழைத்தததாகத் தெரிகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். பின்னர் மணிபாரதி, அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நர்ஸ், தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மணிபாரதியிடம் விசாரித்தனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி

தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோ... மேலும் பார்க்க

TVK: பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,000 பறிப்பு; தவெக நிர்வாகி மீது வழக்கு; ஒருவர் கைது

கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), க... மேலும் பார்க்க

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்... மேலும் பார்க்க

மாஜி காதலியிடம் மன்னிப்புக் கேட்க சென்றபோது அடி, உதை; தப்பிக்க மாடியிலிருந்து குதித்த காதலன் பலி

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் ஹிதேஷ் ரானா. இவரது மனைவி சஞ்சல் ரானா. இதில் சஞ்சல் ரானா திருமணத்திற்கு முன்பு ரஞ்சித் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அந்த வால... மேலும் பார்க்க