கேரளா: பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத பா.ஜ.க மேயர் - திருவனந்தபுரத்தில் நடந்தது ...
சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அப்பெண் கூச்சலிட்டதால், ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அந்தப் பெண்ணிடம் ரயில்வே போலீஸார் விசாரித்ததில், தன்னுடைய பெட்டியில் பயணித்த முதியவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த, திருவள்ளூரைச் சேர்ந்த அருளானந்தம் (63) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



















