செய்திகள் :

சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?

post image

குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முதலில் 24 விளிம்புகள் இருந்தது

1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார்.

அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் மூடிகளை விட இந்த மூடி நன்றாக மூடியிருக்கிறது. ஆனால் பிரச்னையும் இருந்துள்ளது. தானியங்கி இயந்திரங்களில் பாட்டில்களை மூடும் போது, இந்த 24 விளிம்புகள் மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாட்டில்கள் உடைந்து போயிருக்கின்றன. இயந்திரங்களும் அடிக்கடி ஜாம் ஆகியிருக்கின்றன.

பின்னர் பொறியாளர்கள் 23 மற்றும் 22 விளிம்புகளுடன் சோதனை செய்தனர். ஆனால் இவை சரியாக வேலை செய்யவில்லை. நிறைய சோதனைகளுக்குப் பிறகு 21 விளிம்புகள் தான் இதற்கு சரியான தீர்வு என கண்டுபிடித்துள்ளனர்.

21 விளிம்புகள் ஏன்?

சோடா மற்றும் பீர் போன்ற பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தை உள்ளேயே வைத்திருக்க முழுவதும் காற்று புகாத மூடி தேவை. 21 விளிம்புகள் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சரியாக பிடித்து, அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாம்.

அதிக விளிம்புகள் இருந்தால் மூடி மிகவும் இறுக்கமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் திறக்கும் போது பாட்டில் உடையலாம். குறைவான விளிம்புகள் இருந்தால் நன்றாக மூடாது, கசிவு ஏற்படும். இப்படி பல பிரச்னைகளுக்கு 21 விளிம்புகள் என்பது சரியான சமநிலையாக இருந்துள்ளது.

1900களின் ஆரம்பத்தில் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 21 விளிம்புகள் கொண்ட மூடியை விரும்பின. இன்று உலகம் முழுவதும் பீர் அல்லது சோடா பாட்டில் போன்றவற்றில் இதே 21 விளிம்புகள் கொண்ட மூடியைத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'அம்மன் கண், மரம், தங்கம், கரியர்' - சமந்தா வெட்டிங் சாரி சீக்ரெட்ஸ்

நடிகை சமந்தாவிற்கு இயக்குநர் ராஜ் நிதிமொரு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்தது. சமந்தாவின் திருமண ஆடையில் உள்ள சிறப்பசம்ங்களை விளக்குகிறார் சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் பல்லவி.நடிகை சமந்தாவிற்கும், '... மேலும் பார்க்க

உங்கள் பயத்தை ஆசிரியராக மாற்றும் ரகசியம்! - மறந்துபோன பண்புகள் - 7

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

லாட்டரி வெற்றியை மனைவியிடம் மறைத்து, ஆடம்பர வாழ்க்கை - மனஉளைச்சலில் முடிந்த ஜப்பானிய முதியவரின் கதை

கனவில் கூடக் காண முடியாத ஒரு அதிர்ஷ்டம், கோடிக்கணக்கான பணம் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போவார். ஆனால், ஜப்பானில் 66 வயதான ஒருவருக்குக் கிடைத்த லாட்டரி வெற்றி, நிம்மதியை... மேலும் பார்க்க

ஈரோடு: கோட்டை ஈஸ்வரன் கோயிலில் 70+ தம்பதியருக்கு சீர்வரிசையுடன் திருக்கல்யாணம் | Photo Album

ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில் திருக்கல்யாணம்ஈரோட்டில... மேலும் பார்க்க

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்: 35 கடைகளுடன் கோடிக்கணக்கில் அமைந்த புதிய டைம் பாஸ் ஸ்பாட் - எப்படி இருக்கு?

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ஏரி பூங்கா அருகில் பிரமாண்டமான அழகுடன், அனைத்து வசதிகளும் அடங்கிய சுமார் ₹300 கோடி செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது சேலம... மேலும் பார்க்க

திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க