ஜனநாயகன் : "மண்டல தணிக்கை வாரியத்தில் படத்தைப் பார்த்தது யார்? - கேள்வி எழுப்பிய நீதிபதி | Live
"தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்"- தலைமை நீதிபதி
"இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்கிறார்" - தலைமை நீதிபதி
இறுதி முடிவிடுக்கவில்லலை - தணிக்கை வாரியம்
"'ஜனநாயகன்' படத்திற்கு சான்று வழங்குவதில் இறுதி முடிவிடுக்கவில்லலை" என்று தணிக்கை வாரியம் வாதத்தின்போது தெரிவித்திருக்கிறது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஜன.20) உயர் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது. நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அமர்வில் விசாரணைத் தொடங்கி இருக்கிறது.

விசாரணையின் போது, "தணிக்கை சான்றிதழ் தொடர்பாக ஜனவரி 5 ஆம் தேதியே தகவல் கொடுத்துவிட்டோம். 14 காட்சிகளை நீக்கிவிட்டதால் தணிக்கைச் சான்று வழங்கக் கோரினர் படக்குழுவினர். படத்தைப் பார்த்த பின் நாங்கள் முடிவு எடுப்போம் என்று கூறினோம். இறுதி முடிவு எடுப்பதற்கு முன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக்கு முடிவு எடுத்தோம்" என்று ஜனநாயகன் வழக்கில் தணிக்கை வாரியம் வாதங்களை முன்வைத்துள்ளது.
"மண்டல தணிக்கை வாரியத்தில் 'ஜனநாயகன்' படத்தைப் பார்த்தது யார்? மண்டல தணிக்கை வாரிய அதிகாரி 'ஜனநாயகன்' படத்தைப் பார்த்தாரா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

"அதற்கு மண்டல தணிக்கை வாரிய அதிகாரி 'ஜனநாயகன்' படத்தைப் பார்க்கவில்லை. தணிக்கை குழு மட்டுமே படம் பார்த்தது" என்று தணிக்கை வாரியம் சார்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
(More details will be added here..)



















